முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

முஸ்லிம் சமுதாயத்தினர் இந்திய அளவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.
முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

முஸ்லிம் சமுதாயத்தினர் இந்திய அளவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது:

நான் (கருணாநிதி) அதிக நேரம் பேச வேண்டும் என்பதற்காக காதர் மொகிதீன் குறைவான நேரம் பேசினார்.

அதுபோல எல்லாவற்றிலும் (மக்களவை இடம்) குறைவாக எடுத்துக் கொண்டு, திமுகவுக்கு அதிகமாக ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறேன்.

முஸ்லிம் சமுதாயத்தினர் கட்சி ரீதியாக 4 பிரிவுகளாக தமிழகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ, தமிழகத்திலும், இந்திய அளவிலும் இது போன்ற நிலை இல்லாமல் போய்விட்டது.

அந்தக் காலத்தில் நான் பார்த்த முஸ்லிம் லீக் இன்றைக்கு இல்லை. பல கூறுகளாக பிளந்துகிடக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் பாபர் மசூதி இடிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து முதலில் குரல் கொடுத்தது திமுகதான்.

திராவிடர் இயக்கத்திலும் இதுபோன்ற பிளவுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மீலாது நபிக்கு விடுமுறை, உருது பேசும் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது, சிறுபான்மையினர் நல ஆணையம் என திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பல்வேறு நலப்பணி ஆற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.

முன்னதாக நோன்பை திறந்து வைத்து, கருணாநிதி கஞ்சி குடித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com