ஸ்ரீவில்லித்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பூவாணி-சங்கப்பநாயக்கன்பட்டியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாலினி (4), முகீஸ்காவியா (3) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். தங்கேஸ்வரி (14), லோகானந்த் (12) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் திருநெல்வேலி ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஆர்.ரெட்டியபட்டி மருத்துவ அலுவலர் நாராயணன் தலைமையில் மருத்துவக் குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மம்சாபுரம் பேரூராட்சி, காந்திநகர், நரையன்குளம், ஒத்தப்பட்டி காலனி பகுதிகளில் ஒருவித மர்ம காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. கடுமையான காய்ச்சல், கண் எரி்ச்சல், உடல் சோர்வு, கை கால் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும் இந்நோய் தடுப்பிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இப்பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...