மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் அணை, சுரங்கம், கதவணை மின் நிலையங்கள் மூலம் நீர் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் அதே நேரத்தில் புனல் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் உள்ள சுரங்க மின் நிலையத்தில் இருந்து அதிகபட்சம் 200 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதேபோல அணை மின் நிலையத்தில் இருந்து 60 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
இதைத் தவிர, காவிரி ஆற்றின் இடையே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, கல்வடங்கம், பவானி கட்டளை, வெண்டிப்பாளையம் ஆகிய 6 இடங்களில் கட்டப்பட்டுள்ள கதவணை மின் நிலையங்கள் மூலம் தலா 30 மெகாவாட் வீதம் 180 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். மேட்டூர் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் மூலம் சுமார் 170 மெகா வாட் மின் உற்பத்தித் தொடங்கியதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.