தமிழகத்தில் புதிதாக 15 தாலுகாக்கள்

தமிழகத்தில் நடப்பாண்டில் (2014-15) புதிதாக 15 தாலுகாக்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 15 தாலுகாக்கள்
Updated on
1 min read

தமிழகத்தில் நடப்பாண்டில் (2014-15) புதிதாக 15 தாலுகாக்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன் மூலம், தாலுகாக்களின் எண்ணிக்கை 269 ஆக உயரும் என அவர் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை படித்தளித்த அறிக்கை:

மக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும், தாமதமின்றி வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் புதிய கோட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 15 புதிய தாலுகாக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

புதியவை எவை? 1. திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர், பூந்தமல்லி தாலுகாக்களை சீரமைத்து ஆவடியில் புதிய தாலுகா. 2. காஞ்சிபுரம் தாலுகாவைப் பிரித்து வாலாஜாபாத்தில் புதிய தாலுகா. 3. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைப் பிரித்து மரக்காணத்தில் புதிய தாலுகா. 4. கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தைப் பிரித்து புவனகிரியில் புதிய தாலுகா. 5. சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவைப் பிரித்து பெத்தநாயக்கன் பாளையத்தில் புதிய தாலுகா.

6. நாமக்கல் தாலுகாவைப் பிரித்து சேந்தமங்கலத்தில் புதிய தாலுகா. 7. கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி தாலுகாக்களைச் சீரமைத்து பர்கூரில் புதிய தாலுகா. 8. திருவண்ணாமலை மாவட்டம், போளூர், ஆரணி, வந்தவாசி தாலுகாக்களைச் சீரமைத்து சேத்பட்டில் புதிய தாலுகா. 9. செய்யாறு தாலுகாவைப் பிரித்து வெம்பாக்கத்தில் புதிய தாலுகா. 10. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், குளத்தூர் தாலுகாக்களைச் சீரமைத்து விராலிமலையில் புதிய தாலுகா.

11. சிவகங்கை தாலுகாவைப் பிரித்து காளையார்கோவிலில் புதிய தாலுகா. 12. ராமநாதபுரம், கடலாடி தாலுகாக்களைச் சீரமைத்து கீழக்கரையில் புதிய தாலுகா. 13 விருதுநகர் மாவட்டம், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர் ஆகிய தாலுகாக்களைச் சீரமைத்து வெம்பக்கோட்டையில் புதிய தாலுகா. 14. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவைப் பிரித்து திருவேங்கடத்தில் புதிய தாலுகா. 15. தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, செங்கோட்டை ஆகிய தாலுகாக்களைச் சீரமைத்து கடையநல்லூரில் புதிய தாலுகா அமைக்கப்படும்.

மொத்தம் 269: தமிழகத்தில் இப்போது 254 தாலுகாக்கள் உள்ளன. அவற்றுடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 தாலுகாக்களைச் சேர்த்தால் அவற்றின் எண்ணிக்கை 269-ஆக உயரும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com