விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்த்தில் நீர்வள நிலவளத்திட்டம் மூலம் பரளையாறு உபவடிநிலத்தில் உள்ள 8 கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 31-ம் தேதி நடைபெற இருக்கிறது.
அதன் அடிப்படையில் டி.வேலங்குடி கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், ஆண்டியேந்தல் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், சாந்திசேரி கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், வேலனேரி, சொரிக்குளம், முள்ளிக்குடி கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், கொட்டகாய்ச்சியேந்தல் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், தேளி, கடம்பங்குளம், கனையமறித்தான், கீழக்கொன்றைக்குளம் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், தர்மம் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம் உள்ளிட்ட 8 சங்கங்களின் தேர்தல் மேற்குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட இருக்கிறது.
இத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் திருச்சுழி வட்டாட்சியர் அல்லது உதவி தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுக்களை வருகிற 25-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையில் அளிக்கலாம். அதேபோல், வருகிற 26-ம் தேதி இறுதி செய்யப்பட்டு போட்டி ஏற்படும் சங்கங்களுக்கு 31-ம் தேதி வாக்கு பதிவு நடத்தப்பட இருக்கிறது. எனவே இத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்கள் குறிப்பிட்ட பாசன அமைப்புகளின் வாக்காளர் பெயர் பட்டியலில் இடம் பெற்ற நில உடமையாளர்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு தகுதியுள்ளவர்கள் ஆவார்கள் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
செல்வப்பெருந்தகை பிரசாரத்தை முடக்க சதி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

