எஸ்.சி, எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்வித் திருவிழா

எஸ்.சி., எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த  கல்வித் திருவிழா நிகழ்ச்சியில் 10,12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி
Updated on
1 min read

எஸ்.சி., எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த  கல்வித் திருவிழா நிகழ்ச்சியில் 10,12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. 

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் எஸ்.சி, எஸ்.டி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் 26-ம் ஆண்டு கல்வி திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாநில பொருளாளர் எ.சோலைமலை தலைமை வகித்தார். மதுரை மண்டல செயலாளர் அ.விஜயன், மாநில நிர்வாக ஆலோசகர் ஊர்க்காவலன், மாவட்டத் தலைவர் இல.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 10,12-வது வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் 5 பேரை பாராட்டி மாநில அமைப்பாளர் ச.கருப்பையா தங்க பதக்கங்களை வழங்கினார்.

அதேபோல், 10-ம் வகுப்பில் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 8 பேருக்கும், 12-ம் வகுப்பில் 1100 மதிப்பெண்கள் மேல் எடுத்த 2 பேருக்கும் மதுரை மண்டல துணைத்தலைவர் எஸ்.ராமச்சந்திரன் ஆறுதல் பரிசுகளையும் வழங்கினார். இதில், பொறியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தூர்பாண்டியன், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பி.தேவேந்திரசாமி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நி்ர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை அனைத்து துறை மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் ஸ்ரீராமர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com