விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி

இக்கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். மாநில அளவிலான நீச்சல் போட்டியை
Updated on
1 min read

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். மாநில அளவிலான நீச்சல் போட்டியை கல்லுரியின் முதல்வர் சுந்தரபாணடியன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் மாநில அளவில் பல்வேறு  கல்லூரி, பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இவர்களுக்கு ப்ரஸ்ட் ஸ்டோக், பட்டர்பிளை, ப்ரீஸ்டைல், பேக் ஸ்டிரோக் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளிகளுக்கான மொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை எஸ்.டி.எச்.ஜெயின் மெட்ரிக் பள்ளி 33 புள்ளிகள் பெற்று எம்.தர்மராஜன் சுழற்கோப்பையை பரிசாக பெற்றனர். கல்லூரிகளுக்கான ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை லயோலா கல்லூரி 26 புள்ளிகள் பெற்று வி.பி.கே.சின்னச்சாமி நாடார் சுழற்கோப்பையை பெற்றனர்.

மேலும், 2,3 ஆகிய இடங்களை பெற்றவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களையும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் டி.முருகேசன், பயிற்றுநர் ரேவதி, பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளி்ட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com