மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைத் திருட்டைத் தடுக்கும் வகையில் பார்கோடிங் முறையிலான வில்லையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் அடிக்கடி குழந்தைகள் மர்மநபர்களால் திருடப்படுவது சில ஆண்டுகளாகவே தொடர்கிறது. இதுவரை 8 குழந்தைகள் திருடுபோன நிலையில் 2 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைத் திருட்டைத் தடுக்க மருத்துவமனை நிர்வாகம், அடையாள வில்லை முறை, கண்காணிப்புக் காமிரா என பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. ஆனால், குழந்தைத் திருட்டை தடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பார்வையாளர்களுக்கான அடையாள அட்டைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அதன்மூலமும் குழந்தை திருட்டை முழுமையாக தடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் மருத்துவமனை நிர்வாக தரப்பில் கருதப்படுகிறது.
ஆகவே, பிரசவ சிகிச்சைப் பிரிவில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பார்கோடிங் முரையிலிலான அடையாள வில்லை அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதேபோல, பிறக்கும் குழந்தைகளுக்கும் பார்கோடிங் வில்லை அளிக்கப்படும். பார்கோடிங் முரையால் குழந்தை வெளியில் செல்லும்போது யார் எடுத்துச் சென்றுள்ளார் என்பதை குறிப்பிட்ட எண் மூலம் அறியமுடியும் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து செய்தியாளர்கள் மருத்துவமனை டீன் டாக்டர் சாந்தகுமாரிடம் கேட்டபோது, பார்கோடிங் முறையை நடைமுறைப்படுத்தி திட்டமிட்டுவருகிறோம். அதன்மூலம் குழந்தையை சம்பந்தமில்லாதவர்கள் எடுத்துச் செல்வது தவிர்க்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.