புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத்தார். மேலும், தலைமைச் செயலக ஊழியர்களுக்கான உடற்பயிற்சிக் கூடத்தை அவர் திறந்தார்.
புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
Updated on
1 min read

புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத்தார். மேலும், தலைமைச் செயலக ஊழியர்களுக்கான உடற்பயிற்சிக் கூடத்தை அவர் திறந்தார்.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் இப்போதைய கட்டட முகப்பு, கட்டடக் கலை வல்லுநர் குழுவினரால், புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள சரித்திரப் புகழ்மிக்க கட்டடக் கலையைச் சார்ந்திருக்கும் வகையில் கட்டடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடம் ரூ.28 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில், 3 ஆயிரத்து 540 சதுர மீட்டர் அளவில் சூரிய வெப்பம் ஊடுருவதைத் தடுத்து, அதிக வெளிச்சம் ஊடுருவும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் மின்சாரத்தைச் சேமித்திட கட்டடத்தின் உட்பகுதிகளில் மின்சேமிப்பு விளக்குகள் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், அலுவலர்கள் தங்கள் பணியினை மாசற்ற சூழலில் பணியாற்றி குளிரூட்டும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

உடற்பயிற்சிக் கூடம்: தலைமைச் செயலக ஊழியர்களின் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் அனைத்து வகையான அம்சங்களை உள்ளடக்கிய உடற்பயிற்சிக் கருவிகள் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசுத் துறை செயலாளர்கள், தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com