மதுஅருந்த பணம் தராததால் மூதாட்டி தற்கொலை

மதுஅருந்த பணம் தராததால் மூதாட்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் என்.கொசவம்பட்டியைச் சேர்ந்த குருநாதனின் மனைவி
Updated on
1 min read

மதுஅருந்த பணம் தராததால் மூதாட்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் என்.கொசவம்பட்டியைச் சேர்ந்த குருநாதனின் மனைவி திம்மாயி(75). இவருக்கு மது பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், மது அருந்துவதற்கு தனது மகன், பேரன் யாரும் பணம் தராததால் வருத்தமடைந்த திம்மாயி, புதன்கிழமை மாலை வீட்டில் இருந்த குருணை மருந்தை எடுத்து குடித்துவிட்டாராம்.

உயிருக்கு போராடிய நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com