விருதுநகரில் வருகிற 28-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

இம்மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சூலக்கரை அரசு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில் வருகிற 28-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி:

இம்மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிறது.இம்முகாமில் பிரசித்தி பெற்ற பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில், 10-ம் வகுப்பு, பிளஸ்2 தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இம்முகாமில் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு அன்றைய தினமே பணிக்கான நியமன உத்தரவும் வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமி்ல் பங்கேற்று பலர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் பணி நியமனம் பெற்றவர்களின் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. அதனால் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் இம் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com