விதவையர், ஊனமுற்ற படைவீரர்களுக்கு பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம்

போர் விதவையர், போரில் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு MEG(மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்) யூனிட் கோட்டா மூலம் நடத்தப்படும் பல்வேறு
Updated on
1 min read

போர் விதவையர், போரில் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு MEG(மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்) யூனிட் கோட்டா மூலம் நடத்தப்படும் பல்வேறு வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் படைவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சோல்ஜர் பொதுப்பணி, சோல்ஜர் டெக்னீசியன், சோல்ஜர் டிரேட்ஸ்மென், கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் ஆகிய பணிக்கான ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான தேர்வு பெங்களூரு MEG சென்டர் சார்பில் கே.வி.ஸ்டேடியத்தில் 9-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து வருகிற 26-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த MEG பிரிவில் பணியாற்றிய படைவீரர்களின் போர் விதவையர், போரில் ஊனமுற்ற படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களைச் சேர்ந்த குடும்பத்தினர் அதிக அளவில் பங்கேற்று பயனடையலாம்.மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையும்மாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com