திருவாரூர் மாவட்டம்,கோட்டூர் அருகே வெள்ளிக்கிழமை பக்கத்து வீட்டில் தகராறு செய்த மனைவி கத்தியால் குத்தியது தொடர்பாக அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலபனையூர்,ஜீவாதெருவை சேர்ந்தவர் கு.சேகர் மனைவி புவனேஸ்வரி(28).இவர் அதே பகுதியில் குடியிருப்பவர்களுடன் அடிக்கடி பிரச்னை செய்து தகராறில் ஈடுபடுவாராம்.இதனை சேகர் கண்டித்து வந்தாராம்.வெள்ளிக்கிழமை இவர்கள் வீட்டின் எதிரில் உள்ள அரவிந்த் எனபவரது வீட்டில் வாய் தகராறு செய்தாராம் புவனேஸ்வரி.இதுபற்றி சேகருக்கு தெரிய வந்ததை அடுத்து ஆத்திரமடைந்த சேகர் மனைவி புவனேஸ்வரியை கத்தியால் குத்தியதில் காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
இது பற்றி புகாரின் பேரில் வழக்கு பதிந்த கோட்டூர் போலீஸார் சேகரை(33) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.