விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து பின்புறமாக மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே வீரராமலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணனின் மகன் கார்த்திக்(24), அதே ஊரைச் சேர்ந்த மோகனின் மகன் தேவராஜ்(23). இவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு சாத்தூரில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது, சாத்தூர்-விருதுநகர் 4 வழிச்சாலையில் இனாம்ரெட்டிபட்டி விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் போது திருநெல்வேலியிலிருந்து-சென்னை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து பின்புறமாக மோதியது.
இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த நிலையில், தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறி்நத வச்சக்காரப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கார்த்திக்கை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிரமாக சிகி்ச்சை அளிக்கப்பட்டும் ஞாயிற்றுக்கிழமை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரான சாமிநாதனை கைது செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
செல்வப்பெருந்தகை பிரசாரத்தை முடக்க சதி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

