ஆளுநர் உரை கிழிப்பு: திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் சஸ்பெண்ட்

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து திமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கர் (குன்னம்) வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆளுநர் உரையை கிழித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
ஆளுநர் உரை கிழிப்பு: திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் சஸ்பெண்ட்

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து திமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கர் (குன்னம்) வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆளுநர் உரையை கிழித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு இடையே அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் விவரம்:

சட்டப் பேரவையில் பேரவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் வந்து திமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கர் நடந்து கொண்ட விதத்தை அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். அவை மரபுகளுக்கு மாறாக விதிகளை துச்சமாக மதித்து பேரவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலான அவரது நடவடிக்கை தரம் தாழ்ந்ததாகும். ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் சட்டப் பேரவையில் தெரிவித்த கருத்துக்கு எதிர் கருத்துச் சொல்ல இயலாத நிலையில், ஆத்திரம் காரணமாக பேரவைத் தலைவரை மிரட்டும் வகையில் அவரது இருக்கைக்கு அருகே வந்து தான்தோன்றித்தனமாக சிவசங்கர் செயல்பட்டுள்ளார்.

மேலும், பேரவையின் மதிப்பையும், இறையாண்மையையும் காக்கும் பொறுப்புள்ள பேரவைத் தலைவரின் எதிரே ஆளுநர் உரை பிரதிகளை கிழித்தெறிந்திருப்பது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒழுக்கத்தையும், உரிமைகளையும் இழிவுபடுத்தும் செயலாகும். இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக விளங்கும் பேரவையின் தரம் பொது மக்கள் மத்தியில் தாழ்ந்து விடும்.

இதுபோன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமாகும். எனவே, பேரவை அலுவல்களை நடைபெறவிடாமல் இடைமறித்து, பேரவை விதிகளுக்கு மாறாக, அவைக்கு இழுக்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட எஸ்.எஸ்.சிவசங்கரை, இக் கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றார்.

இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து கூட்டத் தொடர் முழுவதும் எஸ்.எஸ்.சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com