"தனிக் கட்சி தொடங்கினால் எதையும் சாதிக்க முடியாது'

காங்கிரஸை விட்டு விலகி தனிக் கட்சி தொடங்கினால் எதையும் சாதிக்க முடியாது என்று ஜி.கே.வாசனை சீண்டும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Updated on
1 min read

காங்கிரஸை விட்டு விலகி தனிக் கட்சி தொடங்கினால் எதையும் சாதிக்க முடியாது என்று ஜி.கே.வாசனை சீண்டும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வாழ்த்தி தலைவர்கள் பேசியது:

மூத்த தலைவர் குமரிஅனந்தன்: 49 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனில் காமராஜரைச் சந்தித்து இந்த நாட்டைக் காப்பாற்றி விட்டாய் என்று ராஜாஜி வாழ்த்தியதை நேரில் கண்டவன் நான். அதுபோல, தமிழக காங்கிரûஸ காப்பாற்றி விட்டாய் என்று நாமெல்லாம் பாராட்டும் அளவுக்கு இளங்கோவன் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவருக்கு எனது முழுமையான ஆதரவு எப்போதும் உண்டு.

அகில இந்தியச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார்: காங்கிரஸýக்கு சோதனையான காலகட்டத்தில் திறமையான தலைவர் கிடைத்திருக்கிறார். காமராஜரின் உண்மையான தொண்டர்கள், காங்கிரஸ் ரத்தம் ஓடுபவர்கள் ஒருபோதும் காங்கிரஸிலிருந்து விலக மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் காங்கிரûஸ பலப்படுத்துவோம்.

அகில இந்தியச் செயலாளர் ஜெயக்குமார்: இது விலகிச் செல்லும் நேரம் அல்ல. காங்கிரûஸ பலப்படுத்த வேண்டிய நேரம். எனவே, காங்கிரûஸ விட்டு வெளியேற வேண்டாம் என வாசனுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுக்கிறேன். தனிக் கட்சி தொடங்கினால் எதையும் சாதிக்க முடியாது.

முன்னாள் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமி: வாழப்பாடி ராமமூர்த்திக்குப் பிறகு அனைவரையும் உற்சாகப்படுத்தக் கூடிய தலைவர் இளங்கோவன். நமக்கு சோனியாவும், ராகுலும்தான் தலைவர்கள். அவர்கள் சொல்வதை மட்டும் கேட்போம். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன்: 2000-ஆம் ஆண்டு இளங்கோவன் தலைவராக இருந்தபோது அவரைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. தனது செயல்பாடுகள் மூலம் அனைவருக்கும் தன்னைப் புரிய வைத்தவர். காங்கிரஸýக்கு வீழ்ச்சி ஏற்படும் போதெல்லாம் அவர் கை கொடுக்கிறார். அவருக்குத் துணையாக நாங்கள் இருப்போம். காங்கிரஸ் ரத்தம் ஓடும் உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் இளங்கோவனின் தலைமையை ஏற்பார்கள்.

விஜயதரணி எம்.எல்.ஏ.: தனிக் கட்சி தொடங்க வேண்டாம் என்று வாசனுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். காங்கிரஸýக்கு தமிழகத்தில் சிறப்பான எதிர்காலம் உள்ளது. அந்த நம்பிக்கையை யாரும் இழக்க வேண்டாம். இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் சிறப்பான இடத்தைப் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com