விருதுநகரில் சுவரை உடைத்து கணிப்பொறி பொருள்கள் திருட்டு

விருதுநகர் கச்சேரி சாலையில் கணிப்பொறி மையத்தின் சுவரை உடைத்து உள்ளேயிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து
Updated on
1 min read

விருதுநகர் கச்சேரி சாலையில் கணிப்பொறி மையத்தின் சுவரை உடைத்து உள்ளேயிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் கச்சேரி சாலையைச் சேர்ந்த வைரவேலின் மகன் ராம்கணேஷ்(35).  இப்பகுதியில் குழந்தைகளுக்கான கணிப்பொறி வீடியோ கேம்ஸ் மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு கணிப்பொறி மையத்தை அடைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து புதன்கிழமை காலையில் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் கணிப்பொறி மையத்தின் சுவர் உடைக்கப்பட்டிருப்பதாக ராம்கணேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் விரைந்து வந்து கடையின் சுவர் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே நுழைந்து பார்க்கையில் கணிப்பொறி மற்றும் வீடியோ பிளேயர் ஆகியவைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதன் மதிப்பு மொத்தம் ரூ.50 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ராம்கணேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுவரை உடைத்து கணிப்பொறி பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com