பழனியில் மணல் கடத்தல் தொடர்பாக நகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் மணல் திருட்டு அதிக அளவு நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பழனியில் நகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவரும் மணல் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். பழனி பழைய தாராபுரம் சாலையில் புதன்கிழமை வருவாய்துறை ஆய்வாளர் மகேஷ் வாகன தணிக்கையில் இருந்த போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியில் எந்த அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து லாரி டிரைவரிடம் ஆவணங்கள் கேட்டுக் கொண்டிருந்த போது லாரியின் உரிமையாளரும், நகராட்சி ஒப்பந்ததாரருமான பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த ராமசாமி(50) சம்பவ இடத்துக்கு வந்து வருவாய்துறையினருடன் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மகேஷ் பழனி டவுன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் நகராட்சி ஒப்பந்ததாரர் ராமசாமி மற்றும் லாரி டிரைவர் வில்வாதம்பட்டியை சேர்ந்த மாயவன்(28) ஆகியோரை மணல் கடத்தல், அரசு அலுவலரை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ராமசாமி மீது முன்னரே பழனி-திண்டுக்கல் சாலையில் சாக்கடைப்பணியின் போது அனுமதியின்றி வெடிகுண்டு வைத்து பாறைகளை உடைத்ததில் ஒரு வீடு சேதமான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

நல்லாட்சி தர வலியுறுத்தினோம்! விஜய்யுடனான சந்திப்பு குறித்து மு. வீரபாண்டியன்
கட்சிக்கு எதிரான விமா்சனம்: 5 செய்தித்தொடா்பாளா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ்

பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
