விருதுநகர் அருகே வேளாண்மைத்துறை சார்பில் மண்வள அட்டை இயக்க தொடக்க விழா

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விளைநிலங்களினஅ மண்வளத் தன்மையை ஆய்வு செய்யும் வகையிலான மண்வள அட்டை இயக்க திட்டத்தை ஆட்சியர்
விருதுநகர் அருகே வேளாண்மைத்துறை சார்பில் மண்வள அட்டை இயக்க தொடக்க விழா
Updated on
1 min read

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விளைநிலங்களினஅ மண்வளத் தன்மையை ஆய்வு செய்யும் வகையிலான மண்வள அட்டை இயக்க திட்டத்தை ஆட்சியர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 

இத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிராம வரைபடத்திலும் சதுர வடிவிலான முறையில் விளைநிலங்களில் மண்மாதிரிகள் சேகரிக்கப்படும். பின்னர் அந்த மண்ணை சலித்து அரை கிலோ அளவிற்கு மண்மாதிரி சேகரித்து மண் பரிசோதனை வேளாண்மை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும்.

அதையடுத்து அச்சதுர அடிப்படையில் அனைத்து புல எண்களுக்கான விவசாயிகளுக்கு உர நிர்வாகம் தொடர்பான மண்வள பரிந்துரை அட்டைகள் வழங்கப்படும். இந்த ஆய்வு மூலம் விவசாயிகள் உரச்செலவை குறைத்து பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை எரிச்சநத்தம் கிராமத்தில் ஆட்சியர் வே.ராஜாராமன் தொடங்கி வைத்தார். மண் பரிசோதனை வேளாண்மை அலுவலர்கள் மண்மாதிரிகள் சேகரித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். இதில், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மைத்துறை துணை இயக்குநர் செண்பகராஜ், வேளாண்மைத்துறை துணை இயக்குநர்(மத்திய திட்டம்) பூவலிங்கம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) செல்வம், வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு) விவேகானந்தன், வேளாண்மை உதவி இயக்குநர்(சிவகாசி) பத்மாவதி, வேளாண்மை அலுவலர்கள் சுப்புராஜ், கோகிலா, அப்பகுதி ஊராட்சி தலைவர்கள் விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com