ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்திமுனையில் 50 பவுன் நகை: ரூ.1.50 லட்சம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து கத்தி முனையில் 2 மணி நேரத்திற்கு மேல் வீட்டினுள் இருந்து நகை, பணம்  கொள்ளையடித்த நபர்கள், வீட்டில் இருந்த பெண்ணை ஏ.டி.எம். மையம் அழைத்துச் சென்று அங்கும் பணம் எடுத்துவிட்டு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2015, 4:15 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து கத்தி முனையில் 2 மணி நேரத்திற்கு மேல் வீட்டினுள் இருந்து நகை, பணம்  கொள்ளையடித்த நபர்கள், வீட்டில் இருந்த பெண்ணை ஏ.டி.எம். மையம் அழைத்துச் சென்று அங்கும் பணம் எடுத்துவிட்டு, அவரை வீட்டில் கொண்டுவந்து விட்டு அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றுள்ளார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலையை ஒட்டியுள்ள கோட்டைத்தலைவாசல் தெருவில் குடியிருந்து வருபவர் மாரிக்கனி (60). இவர் ஓய்வு பெற்ற அரசு தணிக்கையாளர். இவரது மனைவி அமுதா. இவர் கிருஷ்ணப்பேரி காமாக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

இருவர் மட்டுமே வீட்டில் உள்ளார்கள். புதன்கிழமை இரவு 10 மணிக்கு மேல் வெளியே சென்றுவிட்டு, இருவரும் வீட்டினுள் செல்ல கதவை திறந்துள்ளார்கள். அமுதா திறந்து உள்ளே சென்று, சமையல் அறையில் இருந்துள்ளார். மாரிக்கனி பின்னால் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே செல்ல முயன்றபோது, வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி ஒளிந்திருந்த 3 கொள்ளையர்கள் மாரிக்கனியுடன் சேர்ந்து வீட்டினுள் சென்றுள்ளார்கள். கொள்ளையர்கள் கதவைப் பூட்டிவிட்டு, மாரிக்கனியை நாற்காலியில் அமர வைத்து கை, கால்களை கட்டி வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துள்ளார்கள். இது சமையல் அறையில் இருந்த அமுதாவிற்கு தெரியவில்லை.

Story image

பின்னர் அமுதாவிடம் சென்ற கொள்ளையர்கள் கத்தி முனையில் அவர் அணிந்திருந்த செயின், தோடு, பீரோவில் இருந்த நகைகள் என 50 பவுன் நகைகளை எடுத்துள்ளனர். மேலும் ரொக்கப் பணம் ரூ.1.10 லட்சத்தையும் எடுத்துள்ளனர்.

பின்னர் ஏ.டி.எம். கார்டை கொள்ளையர்கள் கேட்டுள்ளார்கள். அதனை அமுதா கொடுத்துள்ளார். வீட்டில் மாரிக்கனியை இரு கொள்ளையர்கள் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். மாரிக்கனியின் இரு சக்கர வாகனத்தில் ஒரு கொள்ளையன், அவரது ஹெல்மட்டை அணிந்து கொண்டு அமுதாவை ஏற்றிக் கொண்டு மாரியம்மன்கோவில் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்றுள்ளார்.

ஏ.டி.எம். மையத்திற்குள் வந்தால் முகம் தெரிந்துவிடும் என்று கூறி, வர மறுத்து வெளியே நின்று கொண்ட கொள்ளையன், அமுதாவை பணம் எடுத்து வரச் சொல்லியுள்ளார். அவர் அதிலிருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்து கொள்ளையன் கையில் கொடுத்துள்ளார். மீண்டும் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார்கள். அவர்கள் செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்துக் கொண்டு, இருவர் காலிலும் விழுந்து மூன்று கொள்ளையர்களும் எங்கள் ஆசீர்வதியுங்கள் என்று கூறி ஆசீர்வாதம் பெற்றுவிட்டு தப்பி ஓடி விட்டார்கள்.

கொள்ளையர் முகமுடி ஏதும் அணியாமல், சுமார் 3 மணி நேரம் அவர்களோடு இருந்துள்ளார்கள். மூவரின் வயதும் சுமார் 25 வயதுக்குள் இருக்கும் என்று அமுதா கூறினார். சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் நடைபெற்றுள்ள இச் சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றி அறிந்ததும் சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.சி.வெள்ளையன், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு உடனடி தீவிர விசாரணையை மேற்கொண்டார்.

வியாழக்கிழமை அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்ப இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.