தமிழக முதல்வர் வரவேற்ற புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் மோடி

சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று தேசிய கைத்தறி தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்கப்படும். தேசிய நெசவாளர்களை ஊக்கப்படுத்த தனி முத்திரை உருவாக்கப்படும்.
Published on
Updated on
1 min read

சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று தேசிய கைத்தறி தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்கப்படும். தேசிய நெசவாளர்களை ஊக்கப்படுத்த தனி முத்திரை உருவாக்கப்படும்.

முத்ரா வங்கி மூலம் நெசவாளர்களுக்கு கடன் உதவி. உலக சந்தையில் நமது நாட்டு கைத்தறிக்கு அறிமுகம் தேவை உலகளாவிய வர்த்தகத்தை உருவாக்க வேண்டும். கைத்தறி குழுமத்திற்கான நிதி உதவி இதுவரை ரூ.60 லட்சமாக இருந்தது. இது ரூ.2 கோடியாக உயர்த்தப்படும். திரைப்படத் துறையினர், கைத்தறி நெசவுத் துணிகளை விளம்பரப்படுத்த வேண்டும். என்று பல்வேறு கருத்துக்களை பேசினார்.

முன்னதாக சென்னை வந்தடைந்த  மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார்.  வரவேற்பு முடிந்த ஒரு சில நொடிகளிலேயே தமிழக முதல்வர் வரவேற்ற புகைப்படத்தையும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் மோடி. பின்னர் விமானநிலையத்திலிருந்து விழா நடக்கும் இடமான சென்னை பல்கலைக்கழகம் அரங்கிற்கு செல்லும் வழியில் கூடியிருந்த மக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேசிய கைத்தறி தினம்’ அறிவிப்பு விழாவில் பங்கேற்பதற் அவர் சென்னை மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ”Vannakam Chennai” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் காரில் வந்தப்போது சென்னையை  படம் எடுத்து, அந்த வீடியோ பதிவை பகிர்ந்து, கனிவான வரவேற்புடன் தரையிறங்கியதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்  எனவும் டிவீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com