இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக, புதுவை 40 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால், நாகப்பட்டினம்,, ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 40  பேர் புதன்கிழமை காரைக்கால் துறைமுகம் வந்துசேர்ந்தனர்.
Updated on
1 min read

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால், நாகப்பட்டினம்,, ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 40  பேர் புதன்கிழமை காரைக்கால் துறைமுகம் வந்துசேர்ந்தனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த 9 பேரும், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 17 பேரும் காரைக்கால், நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20-ம் தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது,  அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி 3 படகுகளில் உள்ள காரைக்கால், நாகை மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் பயன்படுத்திய  படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.  இதுபோல் கடந்த ஜூன் 1-ம் தேதி ராமேசுவரத்திலிருந்து 3 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களையும், எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

காரைக்கால், நாகப்பட்டினம் மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இதுபோல் ராமேசுவரம் மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் அனைவரையும்ம் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீனவர்கள் 40 பேரையும் இலங்கை கடற்படையினர் புதன்கிழமை காலை 10 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். அபீக் என்ற கப்பலில் மீனவர்களை அழைத்துக்கொண்டு இந்திய கடலோரக் காவல்படையினர் காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு 4 மணியளவில் வந்து சேர்ந்தனர்.

கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் எஸ்.என்.எம்.பட்நாயக் மீனவர்களிடம் விசாரணை நடத்தி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் வரவேற்று,  அவர்களுக்கு ஆடை மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கினார். வரவேற்பு நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் எஸ்.பழனிச்சாமி உள்ளிட்ட அந்தந்த மாவட்ட மீன் வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மீனவர்கள் அனைவரும் அரசுத் துறையின் வாகனத்தின் மூலம் அவரவர் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

முன்னதாக மீனவர்கள் கூறும்போது, சுமார் 2 மாதங்கள் சிறையில் இருந்துள்ளோம். மீண்டும் தொழிலுக்கு செல்லும் வகையில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com