ஆடி அமாவாசை: வேதாரண்யம்,கோடியக்கரை கடலில் புனித நீராடல் முன்னோர்களுக்கு நீர் சடங்கு

நாகை மாவட்டம்,வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை புனித நீராடிய மக்கள்,தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்ப்பணம்) செய்து வழிபட்டனர்.
Updated on
1 min read

நாகை மாவட்டம்,வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை புனித நீராடிய மக்கள்,தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்ப்பணம்) செய்து வழிபட்டனர்.

இங்கு,அதிகாலை தொடங்கி நீராடல் நடைபெற்றது.கோடியக்கரை கடல் பகுதி முழுக்குத்துறையில் நீராடிய மக்கள் தங்களது முன்னோர்கள் நினைóவாக தர்பபணம் கொடுத்தனர்.பின்னர் அவர்கள்,அங்குள்ள சித்தர் பீடம்,ராமர் பாதம் ஆகிய இடங்களில் வழிபட்டனர்.

இதேபோல,வேதாரண்யம் சன்னதிக் கடல் பகுதியிலும் நீராடினர்.தொடர்ந்து, வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிக்கர்ணிகை எனும் புனித தீர்த்தக்குளத்தில் நீராடி,இறைவனை வழிபட்டனர்.

பல்வேறு சேவை அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே பந்தல்அமைக்கப்பட்டு, அன்னதானம்,நீர்மோர் போன்றவை அளிக்கப்பட்டது. அரசு போக்க்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com