ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு இரு சக்கர வாகனங்கள் எரிப்பு: மூவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்விரோதத்தில் தீ வைத்ததில் இரு இரு சக்ககர வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. இது தொடர்பாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2015, 2:01 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்விரோதத்தில் தீ வைத்ததில் இரு இரு சக்ககர வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. இது தொடர்பாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், தன்யாநகர், காளையார்குறிச்சி தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் மகன் தங்கத்துரை பாண்டியன் (எ) கார்த்திக் (32). இவர், ராஜபாளையம் சாலையில் வன்னியம்பட்டி விலக்கு அருகே மோட்டார் சைக்கிள் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்,  கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகன் பாண்டியராஜ் (27) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள். இந்நிலையில் பாண்டியராஜ், இதே கடையில் 9 மாதங்களுக்கு முன்னர் ஒரு மோட்டார் வாங்கியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேலையிலிருந்து பாண்டியராஜ் நின்று கொண்டாராம். ஆனால் இவர் வாங்கிய வண்டியை பதிவு செய்து தராமல் தங்கத்துரைபாண்டியன் (எ) கார்த்திக் இழுத்தடித்து வந்துள்ளார். இது குறித்து ஜூலை மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பாண்டியராஜ் புகார் செய்துள்ளார். அப்போது வாகனத்தை பதிவு செய்து தருவதாக தங்கத்துரைபாண்டியன் (எ) கார்த்திக் காவல் நிலையத்தில் உறுதி கொடுத்து வந்துள்ளார். அதன்படி பதிவு செய்து கொடுத்துவிட்டாராம். ஆனால் ஆர்.சி. புத்தகத்தை அவரே வைத்திருந்துள்ளார். இதனால் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு தங்கத்துரைபாண்டியன் (எ) கார்த்திக், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த பசும்பொன் மகன் பாண்டிமுனி (27), முருகானந்தம் மகன் திருமலைமுருகன் (எ) சுரேஷ் (28) சேர்ந்து பாண்டியராஜ் வீட்டின் முன் நிறுத்தியிருந்த அவரது புதிய இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளார்கள். இதில் அருகில் இருந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் எரிந்து நாசமாகியது.

இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பாண்டியராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கத்துரைபாண்டியன் (எ) கார்த்திக், பாண்டிமுனி, திருமலைமுருகன் (எ) சுரேஸ் ஆகியோரைக் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் முன்னிலைப்படுத்தி காவலில் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.