வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

முன்பதிவு ரத்து: சிறப்பு மையங்களை அமைத்து ரயில்வே உத்தரவு

ரயில்வே முன்பதிவு நிலையங்களில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு மையங்களை அமைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2015, 12:20 pm

ரயில்வே முன்பதிவு நிலையங்களில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு மையங்களை அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்குரிய புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில் ரயில் நிலைய முன் பதிவு மையங்களில், டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு கவுன்டர்களை அமைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை விநியோகிக்கும் ஒரு கவுண்டர் சிறப்பு கவுன்டராக மாற்றம் செய்யப்படும். இந்த சிறப்பு கவுன்டர்கள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்யும் கவுன்டர்கள் இல்லாத இடங்களில், ஒரு முன்பதிவு கவுன்டர்,  ரத்து செய்வதற்கான சிறப்பு கவுன்டராக குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் மாற்றம் செய்யப்படும்.

எனினும், இந்த சிறப்பு கவுன்டர்களில் 24 மணி நேரத்துக்குள் புறப்படும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை மட்டுமே ரத்து செய்ய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.