சென்னை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் இதுவரை 2400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் மேலும் 600 பேர் சென்னை வருகினறனர்.
சென்னை மழை வெள்ளம் குறித்த, நெருக்கடி கால மேலாண்மை குழுக் கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெகரிஷி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்பு, உணவு, ரயில்வே, வேளாண்மை, சுகாதாரம், தொலைதொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், வானிலை மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பங்கேற்றனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 30 குழுக்கள் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதியில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இக்கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பேரிடர் மீட்பு குழு (என்.டி.ஆர்.எப்.) தலைவர் ஒ.பி. சிங் கூறினார்.
மீட்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு ராணுவ குழுக்களை அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒரு ராணுவ குழுவில் 75 வீரர்கள் இடம் பெறுவர்.
என்.டி.ஆர்.எப். சார்பில் இதுவரை 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது பணியில் ஈடுபட்டுள்ள 600 பேர் தவிர மேலும், 600 பேரை சென்னைக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


