

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ரங்கம், அரங்கநாத சுவாமி திருக்கோயில் அலுவலக இணையதளம் நேற்று தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், விடுதியில் தங்குவதற்கு, கோயில் சேவை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்பதிவு செய்ய இணையதளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்றிரவு திடீரென இணையதளம் செயல்படவில்லை.
பாகிஸ்தானிய ஹேக்கர்கள் சிலர் இதை முடக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், திருக்கோயில் இணையதள சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இது சரிசெய்யப்பட்டு, இன்று காலை முதல் இணையதள சேவை செயல்பட துவங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.