தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெண் எஸ்.ஐ.க்கு மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்தது சரியே: உயர் நீதிமன்றம்

மின்வாரிய ஊழியரை தாக்கிய வழக்கில், பெண் உதவி ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்தது சரியே என சென்னை உயர் நீதமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

Updated On :12 டிசம்பர் 2015, 9:25 am

மின்வாரிய ஊழியரை சட்ட விரோதமாக அடைத்து வைத்து தாக்கிய வழக்கில், பெண் உதவி ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்தது சரியே என சென்னை உயர் நீதமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

மதுரை மின்வாரிய அலுவலத்தில் மின் கணக்கீடு பணியாளராகப் பணியாற்றி வருபவர் பாலுதாய். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையை கடத்தியது தொடர்பாக இவரை கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி தல்லாக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷோபனா கைது செய்தார்.

பின்னர் அவரை நான்கு நாள்களாக சட்ட விரதோமாக காவலில் அடைத்து வைத்து சித்தரவதைப்படுத்தினாராம்.

இதையடுத்து பாலுத்தாய் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டார். மனுவை விசாரித்த ஆணையம், உதவி ஆய்வாளர் ஷோபனா, பாலுதாய்க்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டது.

மேலும், அத்தொகையை தமிழக அரசு வழங்கவும், பின்னர் அப்பணத்தை ஷோபனாவின் வருமானத்தில் பிடித்து கொள்ளவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஷோபனா செனனை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் என். கிருபாகரன் ஆகியோர், ஷோபனாவின் மனுவை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.