மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும்: பல்கலைக்கழக துணைவேந்தர் ஜே.சந்திரகாந்தா

மாணவ, மாணவிகள் தங்களது எதிர்காலத்தை திறமையுடன்  திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்தார்.
மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும்: பல்கலைக்கழக துணைவேந்தர் ஜே.சந்திரகாந்தா
Updated on
1 min read

மாணவ, மாணவிகள் தங்களது எதிர்காலத்தை திறமையுடன்  திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்தார்.

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி கலையரங்க வளாகத்தில்  சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு செயலாளர் மதன் தலைமை வகித்தார். முதல்வர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெ.சந்திரகாந்தா பங்கேற்று பேசுகையில், ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பட்டம் பெற்ற பின் பெற்றோர், சமூக கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக சிந்திக்கும் திறனை பெறுகின்றனர். இன்றைய தினம் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளன. அதை அடைய கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் போராட வேண்டும். சரியான சிந்தனையுடன் திறமையாக திட்டமிட்டு தன்னம்பிக்கை ஒழுக்கத்துடன் எதிர்காலத்தை பட்டதாரிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய போட்டி நிறைந்த உலகில் வேலைவாய்ப்புக்கு தயார் செய்யும் வகையில் பொது அறிவுடன் ஆங்கிலத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வதோடு, பட்டத்தை வைத்து வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். இப்பட்டம் பெற்றதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து படித்து அறிவை பெறுக்கிக் கொள்வதன் மூலமே சமுதாயத்தில் மதிக்கப்படுவர். இவ்வுலகின் அறிவியல், அரசியல், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த சூழ்நிலைகள் விரைவாக மாறி வருகின்றன. இம்மாற்றத்திற்கு தன்னை தயார்படுத்தும் கலையினை கற்றுக் கொண்டால் மட்டுமே கல்வியில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் தங்கள் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரை மறக்காமல் இருக்க மாணவ, மாணவிகளை அவர் கேட்டுக் கொண்டார். அதையடுத்து இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு  துணைவேந்தர் இளநிலை, முதுநிலை பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில் கல்லூரி பரிபாலனத் தலைவர் பி.வன்னியராஜன், துணைத்தலைவர் எம்.கங்காதரன், பி.பரிமளா, பொருளாளர் முத்து, கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.பழனியப்பன், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com