விவசாயிகளிடையே ரூபே வேளாண் கடன் அட்டையை அலுவலர்கள் பிரபலப்படுத்த வேண்டும்: முதன்மை பொதுமேலாளர் கே.நாகேஸ்வரராவ்

அனைத்து பயன்களையும் பெறும் வகையில் ரூபே வேளாண் கடன் அட்டைகளை வங்கி அலுவலர்கள் விவசாயிகளிடையே பிரபலப்படுத்த வேண்டும் என நபார்டு வங்கியின் முதன்மை பொதுமேலாளர்
Updated on
1 min read

அனைத்து பயன்களையும் பெறும் வகையில் ரூபே வேளாண் கடன் அட்டைகளை வங்கி அலுவலர்கள் விவசாயிகளிடையே பிரபலப்படுத்த வேண்டும் என நபார்டு வங்கியின் முதன்மை பொதுமேலாளர் கேட்டுக்கொண்டார்.

விருதுநகரில் பாண்டியன் கிராம வங்கியின் விவசாயிகளுக்கு ரூபே வேளாண் கடன் அட்டைகள், கூட்டுப்பொறுப்புக்குழு விழிப்புணர்வு, நிதிசார் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி மற்றும் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி ஆகிய நாற்பெரும் விழா ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் வியாழக்கிழமை  நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பாண்டியன் கிராம வங்கியின் தலைவர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இவ்வங்கியின் பொதுமேலாளர் கே.ராமசுப்பு முன்னிலை வகித்தார். இதில், நபார்டு வங்கியின் முதன்மை பொதுமேலாளர் கே.வெங்கடேஸ்வரராவ் பங்கேற்று பேசுகையில், இந்தியாவில் பாண்டியன் கிராம வங்கியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இணைந்து மகளிர் கூட்டுப்பொறுப்புக் குழுக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்குகேற்ப ரூபே வேளாண் கடன் அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது.

இதை வைத்து குறுகிய, நீண்டகால கடன் திட்டங்களை பெறமுடியும். திருப்பிச் செலுத்த வேண்டிய விவரங்களையும் அறி்ந்து கொள்ள முடியும். இதுபோன்ற ரூபே வேளாண் கடன் அட்டைகளின் பயன்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துக்கூறி வங்கியின் ஊழியர்கள் பிரபலப்படுத்த வேண்டும். இந்த அட்டைகளின் ரகசிய எண் ஆகியவைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் தவறானவர்கள் கைகளுக்கு சென்று விடக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் ஜே.சதக்கத்துல்லா பேசுகையில், விருதுநகர் காமராஜர் பிறந்த ஊராகும். வறட்சியான மாவட்டமாக இருப்பதால் வங்கிகள் பல்வேறு தொழில்கள் செய்வதற்கு கடன் உதவி அளிக்கதப்படுகிறது. இந்தியா முழுவதும் இவ்வங்கியில் 1 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. வங்கிகளும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை அளி்த்து கடன்கள்  அளிக்கின்றன. அதற்கு காரணம் பெண்கள்தான் கடன் குறிப்பிட்ட தவணைகளில் பொறுப்புடன் திருப்பி செலுத்துகிறார்கள். தற்போது, இந்தியா முழுவதும் 6 லட்சம் கிராமங்களுக்கு 50000 ஆயிரம் வங்கி கிளைகள் தான் உள்ளன. அதிலும், தமிழகத்தில் 8 கோடி மக்கள் மக்களுக்கு 8 ஆயிரம் வங்கி கிளைகள்தான் உள்ளன. இனிமேல் வருங்காலத்தில் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு வங்கி கிளையை உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதில், மண்டல ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜே.சதக்கத்துல்லா, நபார்டு வங்கியின் முதன்மை பொதுமேலாளர் கே.நாகேஸ்வரராவ் ஆகியோர் விவசாயிகளுக்கு ரூபே வேளாண் கடன் அட்டைகள், முகவர்களு்க்கு பில்லிங் மிஷின்கள், மகளிர் குழுக்களுக்கு காசோலைகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்கள். இந்த விழாவில் ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் நீதிராகவன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மைக் மேலாளர் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com