திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 754 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றினார். அதன்பின்பு அவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன்நாயரும் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.
காவல் ஆய்வாளர் எம்.மரியகிளாஸ்டன் ஜோஸ் அணிவகுப்புக்கு தலைமை வகித்தார். 1-வது பட்டாலியன் வீரர்கள் செந்தில்குமார் தலைமையிலும், 2-வது பட்டாலியன் தலைவர்கள் தாமரைலிங்கம் தலைமையிலும், 3-வது பட்டாலியன் வீரர்கள் முனீஸ் தலைமையிலும், தீயணைப்பு வீரர்கள் எஸ்.வீரராஜ் தலைமையிலும், வனத்துறை வீரர்கள் எம்.பி.செந்தில்குமார் தலைமையிலும், ஊர்க்காவல் படையினர் பி.சைலப்பன் தலைமையிலும், என்.சி.சி. மாணவர்கள் எம்.கார்த்திக் தலைமையிலும், என்.சி.சி. மாணவிகள் பி.பூர்ணசெல்வி தலைமையிலும் அணிவகுத்து வந்தனர்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளான நயினாகரத்தைச் சேர்ந்த கி.லட்சுமிகாந்தன், சேரன்மகாதேவி எஸ்.சண்முகம் ஆகியோருக்கு ஆட்சியர் மு.கருணாகரன் பொன்னாடை அணிவித்தார். அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த எஸ்.தாயம்மாளுக்கு சிறப்பு தியாகி ஓய்வூதியம் வழங்கப்பட்டது. வடக்கு காருக்குறிச்சி முத்துசாமி, வீரவநல்லூர் சீ.செல்லையா ஆகியோருக்கு மொழிக்காவலர் ஓய்வூதியமும், சிவந்திபுரத்தைச் சேர்ந்த க.பாபநாசத்துக்கு எல்லைக் காவலர் ஓய்வூதியமும் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகர காவலின் கீழ் பணியாற்றும் 29 தலைமை காவலர்களுக்கும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் 34 பேருக்கும், ரயில்வே காவல் துறையின் கீழ் பணியாற்றும் 4 பேருக்கும் வீரப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி விளையாட்டு விடுதியைச் சேர்ந்த விக்னேஷ்சங்கர் (கைப்பந்து), விவேக் (கைப்பந்து), சபரி (கைப்பந்து), டி.உதயகுமார் (கைப்பந்து), வடக்கன்குளம் புனித தெரசா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஏ.ஜாண்ஜேக்கப் (நீளம்தாண்டுதல்), வண்ணார்பேட்டை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ராமலட்சுமி (தடகளம்) ஆகியோருக்கு விளையாட்டுத் துறையின் கீழ் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் படைவீரர் நலன் துறையின் கீழ் 9 பேருக்கும் (ரூ. 1 லட்சத்து 69 ஆயிரம்), மாவட்ட தொழில் மையத்தின் கீழ் ஒருவருக்கும் (ரூ.4 லட்சத்து 80 ஆயிரம்), வேளாண் துறையின் கீழ் 3 பேருக்கும் (ரூ.41 ஆயிரம்), தாட்கோ துறையின் கீழ் 4 பேருக்கும் (ரூ. 20 லட்சத்து 38 ஆயிரத்து 624), ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 10 பேருக்கும் (ரூ.34 ஆயிர்தது 650), பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 6 பேருக்கும் (ரூ.54 ஆயிரத்து 500), வருவாய்த் துறையின் கீழ் 20 பேருக்கும் (ரூ.3 லட்சத்து 40 ஆயிரம்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 2 பேருக்கும் (ரூ.47 ஆயிரத்து 980) என மொத்தம் 65 பேருக்கு ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 754 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பாளையங்கோட்டை மேரிசார்ஜன்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாப்டர் மேல்நிலைப் பள்ளி, கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, ரோஸ்மேரி மகளிர் கல்லூரி, சதக்அப்துல்லா அப்பா கல்லூரி, சாராள்தக்கர் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 685 மாணவர்-மாணவிகள் 38.5 நிமிடங்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலாசத்தியானந்த், திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவர் சுமித்சரண், மாநகர காவல் துணை ஆணையர் து.பெ.சுரேஷ்குமார், உதவி ஆணையர் மாதவன்நாயர், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி.குழந்தைவேல், ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட அலுவலர் அ.விஜயகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் நாராயணபெருமாள், மண்டல வனப்பாதுகாவலர் செண்பகமூர்த்தி, சேரன்மகாதேவி சார்ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி கோட்டாட்சியர் பெர்மிவித்யா, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி முதல்வர் எல்.டி.துளசிராம், வேளாண்மை இணை இயக்குநர் சந்திரசேகரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிராங்க்பால்ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

