சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பள்ளிப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ: கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறல்

குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்ததால் பள்ளிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகை மூட்டமாக காணப்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்கள் கடும் சிரமத்துள்ளாகினர்.

Updated On :19 ஜூலை 2015, 3:41 pm

குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்ததால் பள்ளிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகை மூட்டமாக காணப்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்கள் கடும் சிரமத்துள்ளாகினர்.

பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள்,  கோட்டைகாட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி குவித்து வருகின்றனர். அங்கு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதனால் அங்கு குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, குப்பைக்கிடங்கில் இருந்து புகை வந்ததுள்ளது. தொடர்ந்து மளமளவென தீ பரவி குப்பை கிடங்கு முழுவதும் கொழுந்துவிட்டு எரியத்துவங்கியது.

அதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது. தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு படைவீரர்கள் வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்பணி இரவு 9 மணிக்கு பிறகும் நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.