கலாம் மறைவு : காரைக்காலில் நாளை கடையடைப்பு

கலாம் மறைவையொட்டி காரைக்காலில் இன்று வியாழக்கிழமை கடையடைப்பு செய்து அஞ்சலி செலுத்த வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
Updated on
1 min read

கலாம் மறைவையொட்டி காரைக்காலில் இன்று வியாழக்கிழமை கடையடைப்பு செய்து அஞ்சலி செலுத்த வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் அலுவலகத்தில் கலாம் படத்துக்கு அதன் தலைவர் அமுதா ஆர்.ஆறுமுகம் தலைமையில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஆறுமுகம் கூறியது : மறைந்த அப்துல் கலாம் உடல் ராமேசுவரத்தில் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி காரைக்காலில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் அவர் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் வரை கடைகளை அடைத்து முழுமையான அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com