

விருதுநகர் மாவட்டத்தில் கைத்தறி துணி ரகங்களை ரூ.63 லட்சத்திறகு விற்பனை செய்ய இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்தார்.
விருதுநகர் தெப்பக்குளம் அருகில் உள்ள கைத்தறி விற்பனை நிலையத்தில் கைத்தறி துணி ரகங்களை தள்ளுபடி விற்பனை தொடக்க விழா புதன்கிழமை மாலையில் நடைபெற்றது. இதில், ஆட்சியர் வே.ராஜாராமன் பங்கேற்று பேசியதாவது: கோ-ஆப்டெக்ஸ் என்று அனைவராலும் அழைக்கப்படும் கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கம் 1935 ல் தோற்றுவிக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த 80 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளித்து பொதுமக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே முதன்மையான நிறுவனமாக விளங்கக் காரணம் நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் ஆதாரவுமே ஆகும்.
வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையிலும், நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை விற்பனை செய்வதன் மூலமே அவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இம்முறை உற்பத்தி செய்த கைத்தறி துணி ரகங்களை சந்தைப்படுத்தும் வகையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கைக்குட்டை முதல் பட்டுச்சேலை வரையில் பொறுந்தும். இதற்கு 20 சதவீதம் வரையில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.2.79 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. அதேபோல், நிகழாண்டில் 4.50 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் விற்பனை நிலையங்கள் மூலம் கடந்தாண்டு ரூ.39.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.63 லட்சத்திற்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கைத்தறி ரகங்களை வாங்கி பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதில், நகராட்சி மா.சாந்தி, நிர்வாகக்குழு உறுப்பினர் மஞ்சுளா, மண்டல மேலாளர் துர்க்காராம், மேலாளர்(தணிக்கை) அன்பழகன், முதுநிலை மேலாளர் ரஞ்சனி, துணை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.