விருதுநகரில் பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை முதல், தொடர்ந்து 26-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5-ம் தேதி முதல், தொடர்ந்து இம்மாத இறுதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே நடந்து முடிந்த தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கான 30 ஆயிரம் விடைத்தாள்கள் விருதுநகர் பி.சி சிதம்பரநாடார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு வந்துள்ளன. இதில், முதன்மைத் தேர்வர்கள், மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் விடைத்தாள் திருத்தும் பணியை முதல் நாள் மேற்கொண்டனர்.
மேலும், இப்பணியில் தலைமையாசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 150 பேரும், முதன்மைக் கல்வி அலுவலக அலுவலர்கள் 40 பேரும் ஈடுபடவுள்ளனர். மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு ஆசிரியருக்கு தலா 30 விடைத்தாள்கள் வரையில் திருத்தம் செய்வதற்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.