விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 30170 பேர் பங்கேற்று தேர்வு எழுத இருக்கிறார்கள். இத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதி(வியாழக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அந்தந்த தேர்வு மையங்களில் தயாராக உள்ளது. இத்தேர்வில் விருதுநகர், அருப்புக்கேட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 335 பள்ளிகளில் இருந்து 30,170 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதுகின்றார்கள். இதற்காக 98 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 10-ம் வகுப்பிற்கான முகப்புத்தாள் சீட்டுக்களுடன், விடைத்தாள்களும் அந்தந்த கல்வி மாவட்டங்களில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டு காப்பாளர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் 3 கல்வி மாவட்டங்களில் 10 வினாத்தாள் கட்டு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பிட்ட தேர்வு நாளன்று முக்கி வழித்தடங்கள் வழியாக ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் வினாத்தாள் கட்டுக்களை பாதுகாப்புடன் எடுத்துச் சென்று விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 10-ம் வகுப்பு பாடவாரியாக ஒவ்வொரு தேர்விற்கும் இடையே விடுமுறை நாள்கள் உள்ளன. இதை மாணவ, மாணவிகள் கவனமாகவும், நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண்கள் பெறவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டு்க கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.