இளைஞர் குழுக்கள் மூலம் மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்துகிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரம்

விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திராவின் இளைஞர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரம் வருகிற 29-ம் தேதி முதல்,
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திராவின் இளைஞர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரம் வருகிற 29-ம் தேதி முதல், தொடர்ந்து ஏப்.29ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட்ஜேம்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் புனர்ஜாகரன் என்ற கிராம மறுகட்டமைப்பு திட்டம் சார்பில் 20 மாநிலங்களிலுள்ள 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இளைஞர் குழு மற்றும் மகளிர் குழுக்கள் சிறப்புடன் செயல்படும் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் விவரமாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும். மேலும், பாரத பிரதமரின் தேசிய கனவு திட்டங்களான அனைவருக்கும் வங்கிக் கணக்கு, தூய்மை இந்தியா, அனைவருக்கும் கழிப்பிட வசதி, மாதிரி கிராமம், கிராமங்களில் நல்லாட்சியை நடைமுறைப்படுத்தி அடிப்படை பணிகள் மேற்கொள்ள வலியுறுத்துதல் ஆகியவைகள் குறித்து விளக்கமாக பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட உள்ளது.

அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 3 வழித்தடங்களில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த பிரசார வாகனத்தில் மத்திய, மாநில அரசின் நலத்திட்ட விளம்பர விவரங்களுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், படக்காட்சி, நலத்திட்டம் மற்றும் கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு கையேடுகளும் பொதுமக்களிடம் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே இத்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் மற்றும் மகளிர் குழுக்கள், தன்னார்வ தொண்டர்கள், ஊராட்சி தலைவர்கள், கலைக்குழுவினர்களுக்கு விழிப்புணர்வு தொடர்பாக பயிற்சி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com