விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் மு.நாகராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கத்தில் ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமையில் மேற்குறிப்பிட்ட நாளில் மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.
எனவே இக்கூட்டத்தில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வரும் படைவீரர்களின் குடும்பத்தினரும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று குறைகள் தொடர்பான மனுக்கள் இரண்டு பிரதிகளில் எடுத்து சமர்பித்து பயனடையும்மாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.