இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடாது என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.காதர்முகைதீன் சனிக்கிழமை ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
கட்சியின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் ராமநாதபுரம் ஹாஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது:
மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் தேர்தலை ஜூன் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து அதனை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவோம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடாது. அதே நேரத்தில் தேர்தலை புறக்கணிக்கும் எண்ணமும் இல்லை. திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் இருப்பதால் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவின் படி யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்வோம். இந்திய மக்களை மத அடிப்படையில் பிரிக்கப் பார்க்கிறது மத்திய அரசு. இந்துத்துவா கொள்கைகளுக்கு பா.ஜ.க. அரசு அஸ்திவாரம் போடுகிறது. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு முஸ்லிம் லீக் உடன்படாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.