பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சோளிங்கர்: பிளஸ்2 படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

பிளஸ் 2 படித்து விட்டு சோளிங்கரில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :7 நவம்பர் 2015, 12:03 pm

சீனிவாசன்

பிளஸ் 2 படித்து விட்டு சோளிங்கரில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சோளிங்கரில் போலி டாக்டர்கள் கிளினிக் வைத்து சிகிச்சை அளிப்பதாக வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணைஇயக்குனர் மணிமேகலைக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் இணைஇயக்குனர் மணிமேகலை, சோளிங்கர்  அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி ஆகியோர் சோளிங்கர் பஜாரில் உள்ள ஒரு கிளினிக்கில் சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார்(44) என்பவர் பிளஸ்2 படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து அங்கிருந்த மருந்து மாத்திரைகள் ஊசிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து இணை இயக்குனர் மருத்துவர் மணிமேகலை சோளிங்கர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் வழக்கு பதிந்து போலி டாக்டர் குமாரை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.