பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரியகாட்டுபாளையம் மக்களைச் சந்தித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

News image
Updated On :12 நவம்பர் 2015, 9:31 am

சீனிவாசன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரியகாட்டுபாளையம் மக்களைச் சந்தித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

கடந்த திங்கள் கிழமை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தால் பெரியகாட்டுபாளையம் காலணியைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள பள்ளியில் தங்கப்பட்டுள்ளனர். பாதிப்பட்டு முகாமில் தங்கியுள்ளோர்களை திமுக பொருளாளர் ஸ்டாலின் நேரில் சந்திந்து ஆறுதல் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,. ஏரி, குளம், கால்வாய், வாய்க்கால்களைத் தூர்வாரப்படாததாலும், அரசு முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றன. இவருடன் முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வம், பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

காங்கிரஸ் எஸ்.சி. பிரிவின் மாநில தலைவர் செந்தமிழ் தலைவன், ஆலோசகர் வழக்குரைஞர் விஜயன் மற்றும் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.