கடலூரில் கிராம நிர்வாக அலுவலகத்தைப் பூட்டு போட்டு பொதுமக்கள் முற்றுகை
கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்டி, வருவாய் துறை அலுவலர்களை சிறைப்பிடித்து வைத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தைப் பூட்டி, வருவாய் துறை அலுவலர்களை சிறைபிடித்து வைத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில், பன்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இவர்களுக்குத் தமிழக அரசு நிவாரண உதவி வழங்கி வருகின்றது.
தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் 6 அமைச்சர்கள் கடலூரில் தங்கிச் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்., இதனிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. கீழிருப்பு கிராமத்தில் திங்கள்கிழமை காலை வருவாய் துறையினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் தங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கினர். இதில் ரூ.2500 மட்டும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தைப் பூட்டு போட்டு அனைத்து அதிகாரிகளையும் சிறை பிடித்து முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...