தமிழகம் முழுவதும் ஏற்றபட்ட மழை வெள்ளச் சேதங்கள் குறித்து குற்றம்சாட்டுவதை தவிர்த்து ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களில் பெய்த கன மழையால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசும், அரசு நிர்வாகமும் தயாராக இருக்கவில்லை என தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், வெள்ளம் குறித்து ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டுவதை தவிர்த்து, வருங்காலங்களில் நீரை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மழை வெள்ளத்தை சரியான முறையில் அணுகியிருந்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது என்றார்.
மேலும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட உபரி நீர் அனைத்தும் நீர்நிலைகள், கிணறுகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் மற்ற சேமிப்பு அமைப்பு (மழை நீர் சேகரிப்பு முறை)மூலம் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது வருங்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாகுறையை சமாளிப்பதற்கு உதவியிருக்கும்.
மழைநீர் வடிகால்களில் ஏற்படுத்தப்பட்ட அடைப்புகளாலே வெள்ள நீர் வெளியேற முடியாமல், பல இடங்களில் தேங்கி உள்ளது. மேலும், மழை நீர் உறிஞ்ச முடியாமல் பல இடங்களில் மண் கடினமாக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில் வெள்ளம் குறித்த விரிவான வரைபடம் தேவை என்பதை இந்த மழை நமக்கு சுட்டிகாட்டியுள்ளது.
மழை வெள்ள சேதங்களை தவிர்ப்பதற்கு உள்ளூர் மக்களுடன் இணைந்து விரிவான திட்டங்களை தீட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் சுவாமிநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


