ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மூன்று மாதமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது

தனியார் பள்ளி மாணவியை மிரட்டி மூன்று மாதங்களகாக பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார்.

Updated On :29 நவம்பர் 2015, 2:53 pm

மேற்கு வங்க மாநிலத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிலிகுரியில், தனியார் பள்ளி மாணவியை மிரட்டி மூன்று மாதங்களகாக பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார்.

சிலிகுரியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 12-வயது மாணவி ஒருவர் திடீரென்று பள்ளிக்கு செல்லமாட்டேன் என கூறி பெற்றோரிடம் அடம் பிடித்துள்ளார்.

விசாரணையில் அந்த மாணவியை பள்ளி ஆசிரியரே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பக்தோக்ரா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் சரோஜ் தாஸ் (50) இன்று கைது செய்தனர்.  போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறி நடந்தது தெரியவந்தது. மேலும், அவர் மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.