திருநள்ளாறில் பக்தர்களுக்காக கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்ட கியூ காம்ப்ளக்ஸ் சனிக்கிழமை முதல் பயன்படுத்த அனுமதிக்கப்படுமென வளாகத்தை ஆய்வு செய்த ஆட்சியர் இ.வல்லவன் தெரிவித்தார்.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் கட்டப்பட்ட பக்தர்களுக்கான வரிசை வளாகம் (கியூ காம்ப்ளக்ஸ்) கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியால் திறக்கப்பட்டது. எனினும் அது பயன்பாட்டுக்கு விடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் இவ்வளாகத்தை வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து, சனிக்கிழமை முதல் வளாகத்தை பயன்பாட்டுக்கு திறக்க அவர் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.