மதுரை அரசு பேருந்துகளில் குண்டுவெடிப்பு சம்பவம்: 3 வீடுகளில் திடீர் சோதனை

மதுரையில் கடந்த மாதம் அரசு பேருந்துகளில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புத் தொடர்பாக 3 பேர் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் திடீரென சோதனை நடத்தியுள்ளனர்.
Updated on
1 min read

மதுரையில் கடந்த மாதம் அரசு பேருந்துகளில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புத் தொடர்பாக 3 பேர் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் திடீரென சோதனை நடத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இரவு மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சேலம், ஓசூரிலிருந்து வந்து நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துகளில் குண்டுகள் வெடித்த சம்பவம் குறித்து கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே வெடிபொருள்களை பதுக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்களே, ஆரப்பாளையம் பஸ்களில் குண்டு வெடிப்பிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது. அதனடிப்படையில் நெல்பேட்டை, தெற்குவாசல்,வில்லாபுரம் பகுதிகளில் உள்ள 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில வெடிகுண்டு பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com