விருதுநகரில் இளைஞர் கொலை: நால்வர் கைது
விருதுநகரில் முன்விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.


விருதுநகரில் முன்விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (28). 2013-ம் ஆண்டு இதே இடத்தைச் சேர்ந்த ஜே.கார்த்திக் என்பவரின் சகோதரர் ஈஸ்வரன் (19) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பால்பாண்டியன் சகோதரர் விஜயபாண்டி என்பவரை கைது செய்யப்பட்டார். இதனால் பால்பாண்டி குடும்பத்திற்கும், ஜே.கார்த்திக் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இதனால் பால்பாண்டி தனது குடும்பத்தை சில மாதங்களுக்கு முன்னர் கன்னிசேரிபுதூருக்கு மாற்றியுள்ளார். இங்கு ஒரு பட்டாசு ஆலையில் அவர் வேலை பார்த்து வந்தார்.
தனது தாய் கமலாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மருந்துக்டை அருகே பால்பாண்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோ மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் பால்பாண்டியை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் விருதுநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்.
இது குறித்து கமலா, வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருத்தங்கல்லைச் சேர்ந்த டி.கார்த்திக் (22), முத்துக்குமார் (22), பாலமுருகன் (22) மற்றும் சிவகாசியைச் சேர்ந்த சென்றாயன் (19) ஆகிய நால்வரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜே.கார்த்திக், புதியம்பிள்ளை ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...