கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் மோசடி: விற்பனையாளர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் மோசடி செய்ததாக விற்பனையாளரை போலீஸார் கைது செய்தனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் மோசடி செய்ததாக விற்பனையாளரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோட்டையூர், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மனைவி சந்தனவல்லி (45). இவர் உள்ளிட்ட பலர் இங்குள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் கறவை மாட்டு கடன் பெற்று மாடு வாங்கி தொழில் செய்து வருகிறார்கள். இந்த மாடுகள் தரும் பாலை சங்கத்திற்கு ஊற்ற வேண்டும். அவர்கள் அந்த பாலுக்கான தொகையை சங்கத்தில் செலுத்தி கடன் தொகையில் வரவு வைப்பார்கள். மேலும் கூடுதலாக பணம் செலுத்தியும் கடன் தொகையை வரவு வைப்பார்கள்.
இந்நிலையில் கறவை மாட்டிற்கு வாங்கிய கடன் தொகை செலுத்தப்படவில்லை என்று கூறி வங்கியிலிருந்து சந்தனவல்லி, முத்துலட்சுமி உள்ளிட்ட பலருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.
இதனையடுத்து வியாழக்கிழமை இரவு முத்துலட்சுமியின் வீட்டின் அருகே இருந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க விற்பனையாளர் பெரியசாமி மகன் மாரிமுத்து (58) என்பவரிடம் நாங்கள் உங்களிடம் பணமாகவும் கடன் தொகை செலுத்தியுள்ளோம். பால் ஊற்றியுள்ளோம். ஆனால் வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது என்று கேட்டுள்ளார்கள். அதற்கு மாரிமுத்து, இவர்களை ஆபாசமாகப் பேசி அங்கிருந்த கம்பை எடுத்துக்காட்டி மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து சந்தனவல்லி, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் ராஜாகனி, சின்னு, நல்லம்மாள், முனியம்மாள், நல்லதங்காள், பெருமாள், காளியம்மாள் உள்ளிட்ட பலர் சங்கத்தின் பால் ஊற்றியும், ரொக்கமாக செலுத்தியும் விற்பனையாளர் மாரிமுத்து கடன் தொகையை சங்கத்தில் செலுத்தாமல் நம்பிக்கை மோசடி செய்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1- ல் முன்னிலைப்படுத்தி காவலில் வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...