ரூ.11,500 லஞ்சம் வாங்கிய தனித்துணை ஆட்சியரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜா(37). விவசாயியான இவர் அதேப்பகுதியில் 35 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை பத்திரபதிவு செய்வதற்காக குறிஞ்சிப்பாடி அலுவலகத்திற்குச் சென்ற போது முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த கடலூருக்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடலூர் மாவட்ட புதிய ஆட்சியரகத்திலுள்ள முத்திரைத்தாள் அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் ச.தாஸை சந்தித்துள்ளார். அப்போது, நிலத்தின் மதிப்பை குறைத்து ரூ.8,500க்கு பதிவு செய்வதாகவும், அதற்கு ரூ.11,500 சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டுமென தாஸ் கேட்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா இதுகுறித்து கடலூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவப்பட்ட பணத்துடன் சென்ற ராஜா மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கட்கிழமை தாஸை சந்தித்து லஞ்ச பணம் ரூ.11,500ஐ சேர்த்து ரூ.20 ஆயிரத்தை வழங்கியுள்ளார். ஆனால், அதனை தனது வாகனத்தின் ஓட்டுநர் பிரபாகரனிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பணத்தை பெற்றுக் கொண்ட பிரபாகரன் அதனை தாஸிடம் வழங்கினார். அப்போது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் கே. உதயசங்கர் தலைமையில் மறைந்திருந்த ஆய்வாளர்கள் திருமால், சதீஷ் ஆகியோர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ச.தாஸ்(52) சொந்த ஊர் காஞ்சிபுரமாகும். இவர் தற்போது கடலூரில் தங்கியுள்ளார். அரசு வாகனத்திற்கு தனது செலவில் கடலூர் சாவடியைச் சேர்ந்த மணி மகன் பிரபாகரன்(28) என்பவரை ஓட்டுனராக நியமித்திருந்தார். அவர் மூலமாகவே லஞ்சம் பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கட்கிழமையன்று ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் ஊழல் ஒழிப்புத் தின உறுதிமொழியேற்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தாஸ் கைது செய்யப்பட்டார். புதிய ஆட்சியரகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் பதிவுத்துறையில் இந்த முதல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

