மருது சகோதரர்கள் நினைவிடத்தில் சிறப்பு பூஜை: அரசியல் கட்சியினர் மரியாதை

காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் 214-ஆவது குருபூஜையையொட்டி, அவர்களது நினைவிடத்தில்
மருது சகோதரர்கள் நினைவிடத்தில் சிறப்பு பூஜை: அரசியல் கட்சியினர் மரியாதை
Updated on
1 min read

காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் 214-ஆவது குருபூஜையையொட்டி, அவர்களது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
 சிவகங்கை அருகேயுள்ள காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் 214-ஆவது குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காலை 7 மணிக்கு கோவை காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கிராம மக்கள், மருதுபாண்டியர் பேரவை சார்பில் 214 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து மரியாதை செலுத்தினர்.
 நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசர், தமாகா மாநில பொதுச் செயலாளர் சுப.உடையப்பன், மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், வட்டாரத் தலைவர்கள் மணி, ராஜா ஆகியோர் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 பின்னர், பாஜக அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
 அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் சிவதேவ்குமார், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சுப.த. திவாகர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பவானி ராஜேந்திரன், தேசிய பார்வார்டு பிளாக் தலைவர் பி.டி.அரசகுமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனத் தலைவர் டாக்டர் என்.சேதுராமன், மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்பட பலர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
"காங்கிரஸ், திமுகவால் மருது சகோதரர்கள் வரலாறு முடக்கம்'
 மருது சகோதரர்கள் குருபூஜையில் பங்கேற்ற பாஜக. தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் போரிட்டவர்கள் மருது சகோதரர்கள். இவர்களது வரலாறு தமிழகத்திற்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசில் இருந்த காங்கிரஸ் கட்சியும், அதற்கு துணையாக இருந்த திமுகவுமே காரணம். காங்கிரஸ் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்படும். இவர்களது வரலாற்றை, மத்திய அரசின் பாடத்திட்டங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த அமைப்பு கட்டடங்கள், பொது கட்டடங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com